Showing posts with label அட ராமா...இப்போது மட்டும் இலங்கை உனக்கு தூரமா?. Show all posts
Showing posts with label அட ராமா...இப்போது மட்டும் இலங்கை உனக்கு தூரமா?. Show all posts

எங்கேடா போனாய் அட ராமா....

>> Friday, October 31, 2008

உன் சீதை இலங்கையில்
சிறை வைக்கப்பட்டாள்
என்பதற்காக
பாலம் கட்டி போரிட்டாய்
உலகம் மெச்சியது
உன் சிறப்பை...

ஆனால் இப்போதோ
அங்கே ஆயிரமாயிரம்
சீதைகள்
சீரழிகின்றனர்
போரிட தயக்கம் ஏன்...
எங்கேடா போனாய் அட ராமா...

உன் மனைவி என்பதற்காகவா
கடல் தாண்டி சென்று
கயவர்களை அழித்தாய்...
அந்த வேகம் எங்கே
இப்போது மட்டும்
இலங்கை உனக்கு தூரமா
எங்கேடா போனாய் அட ராமா...


இனி ஒரு கம்பரோ, வால்மீகியால்
மட்டுமே
உன்னை உருவாக்க முடியும்
அவர்கள் கற்பனையில்
மட்டுமே
உன்னால் போரிட முடியும்

நீ ஒரு கதை நாயகன்
அவ்வளவு தான்
என்பதை நிரூபித்து விட்டாய்...

எங்கேடா போனாய் அட ராமா...

Read more...